AUKU சட்டம் காலத்திற்கேற்ப தொடர்ந்து திருத்தம் – உயர்கல்வி அமைச்சர் ஸம்ரி
- Tamil Malar (Reporter)
- 11 Feb, 2026
புத்ராஜெயா, பிப். 11-
பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டம் (AUKU) 1971-ஐ காலத்தின் மாற்றங்கள் மற்றும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப அரசாங்கம் தொடர்ந்து திருத்தி வருவதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
AUKU தொடர்பாக மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து தாம் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது மாணவர்கள் அனுபவிக்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் செயல்பாட்டு வாய்ப்புகள், AUKU சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் விளைவாக உருவானவை என்றும் அவர் விளக்கினார்.
மேலும், உயர்கல்வி அமைச்சகம் (KPT) AUKU தொடர்பாக வரும் அனைத்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், சட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மாணவர் உரிமைகள் மற்றும் பல்கலைக்கழகச் சுதந்திரத்தை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அமைச்சர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



