சட்டவிரோத வணிகத்தளங்களை மூடிய DBKL!

- Sangeetha K Loganathan
- 24 Nov, 2024
தலைநகரின் பிரபல வணிகத் தளமான Berjaya Times Square வணிகத்தளத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதால் 8 கடைகளை மூடியதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. வணிக உரிமம் இல்லாதது, சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தியது, வணிக வரி செலுத்தாமல் செயல்பட்டது என பல்வேறு குற்றங்களில் சம்மந்தப்பட்ட 8 கடைகள் ஈடுபட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்டவர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கடைகளும் உள்ளூர் நபர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டினர்கள் நடத்தி வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
DBKL menutup lapan kedai di Berjaya Times Square atas kesalahan tiada lesen, menggaji pekerja asing tanpa izin, dan mengelak cukai. Semua kedai disiasat selepas aduan diterima.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *