போகிப் பண்டிகை சிறப்புகள்

top-news

லட்சுமி சுப்ரமணியம்

மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை "பழையன கழிதலும் புதியன புகுதலுமே" என்ற சாராம்சத்தை அடிப்படியாக கொண்டது. பழைய பொருட்கள் மற்றும் பயனற்றவையை தூக்கி எறியும் நாளாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வீட்டை தூய்மை செய்து பயன்படுத்தாத அல்லது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது வழக்கம். பழையவற்றை அழித்து போக்கும் இந்த பண்டிகை முன் "போக்கி' என்றே அழைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இது மருவி போகி என்றாகிவிட்டது. போகி, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது.  ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 14, மார்கழி 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

வழிபடும் முறை

போகி பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ‘நிலைப் பொங்கல்’ நிகழ்வு நடத்த வேண்டும். அதாவது வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகுபடுத்தி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும்.இதில் முக்கியமாக கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்குவர். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் விலகி லெட்சுமிகாட்சம் பெருகும். இந்த பூஜையை வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிதான் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

மேலும் நிவேதனமாக வடை, பாயசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைக்க வேண்டும்.

இந்திர வழிபாடு

இந்திர வழிபாடு என்பது போகி பண்டிகையின் போது, வீட்டுக்குள் தெய்வீக உணர்வுகளை, குணங்களையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காகவும்தான் வீட்டின் கூரையில் கண்ணுப்பீழையை கட்டி வைக்கின்றனர். போகி தினத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் முதலான தேவர்களை பூஜித்து அவர்களை திருப்தி செய்ய வேண்டும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *