உலக அரங்கில் மலேசியாவுக்கு பெருமை - IWK-க்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரத்தை பாராட்டிய பிரதமர் அன்வார்

top-news

கோலாலம்பூர், மே 22-

தேசிய கழிவுநீர் மேலாண்மை நிறுவனமான Indah Water Konsortium (IWK) பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரம், மலேசியாவின் நீர் மற்றும் சுகாதார மேலாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையான முன்னேற்றத்தைக் காட்டுவதாகப் பிரதமர் Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

பிரதமரும் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சாதனை நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG 2030) நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு முக்கிய ஊக்கமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.

“இந்த வெற்றி, எதிர்கால தலைமுறைகளுக்காக நிலையான, அனைவர் பங்களிப்பும் கொண்ட மற்றும் வளமான நாட்டை உருவாக்கும் முயற்சிகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் என நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற Global Water Awards 2026 விருது வழங்கும் விழாவில், தேசிய கழிவுநீர் சேவை நிறுவனமான IWK, SDG6 விருதை வென்று சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

நீர் வள பாதுகாப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்