ஒற்றுமை அரசில் தொடரலாமா? விரைவில் முடிவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 4-

தற்போதைய ஆட்சிக் காலம் முடியும் வரை ஒற்றுமை அரசில் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக, டிஏபி (DAP) கட்சி வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிறப்பு தேசிய மாநாட்டை நடத்தவுள்ளதாக டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.

மாநாட்டில் இந்த விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த தீர்மானத்தின் மீது மாநாட்டில் பங்கேற்கும் 4,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வாக்களித்து இறுதி முடிவை எடுப்பார்கள் என அவர் மேலும் சொன்னார்.

இந்த விவகாரம் குறித்து கட்சியின் மத்திய செயற்குழு (CEC) தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்காது என்றும், கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *