தங்கம் தோண்ட அனுமதி வயது வரம்பு விரைவில் முடிவு – கிளந்தான் அரசு

top-news

கோத்தா பாரு, டிச. 12-

கிளந்தான் மாநிலத்தில் தங்கம் தோண்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கான வயது வரம்பை மாநில அரசு விரைவில் இறுதி செய்யும் என்று துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் பாட்ஸ்லி ஹசான் தெரிவித்தார்.

“இதுவரை எந்த வயதுடையவர்கள் உரிமம் பெறலாம் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இந்த விடயம் விரைவில் முடிவு செய்யப்படும்,” என்று அவர் இன்று இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், அடுத்த மாதம் முதல் மக்கள் நிலம், கனிம வளத்துறை அலுவலகம் மூலம் தங்கம் தோண்டுவதற்கான உரிமத்தை விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்தார்.

“தங்கம் தோண்டுபவர்கள் கட்டாயம் அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது அவர்களது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும்,” என்று டத்தோ டாக்டர் முகமட் பாட்ஸ்லி வலியுறுத்தினார்.

கிளந்தானில் பல ஆறுகளிலும் நிலப்பகுதிகளிலும் தங்கம் கிடைப்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாரம்பரிய முறையில் தங்கம் தோண்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்புதிய உரிம முறை ஒழுங்குமுறை, பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *