மண் சரிவு விபத்து: விஜயலட்சுமி குடும்பம் 8 லட்சம் வெள்ளி இழப்பீடு கோர முடிவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 7-

கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு சம்பவத்தில் உயிரிழந்த ஜி. விஜயலட்சுமியின் குடும்பத்தினர் சுமார் RM800,000 இழப்பீடு கோரி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர் எம். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் முன்னர் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கில், மரம் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு பராமரிப்பு அலட்சியம் காரணமாக இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய வழக்கிற்கும் RM800,000 அளவிலான இழப்பீடு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

கடந்த ஆண்டு ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் விஜயலட்சுமி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் அப்போது எழுந்தது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *