அரசியலமைப்பின் மேன்மையையும், சட்டத்தின் இறையாண்மையையும் பேணுங்கள்- மாமன்னர் அறிவுறுத்தல்
- Tamil Malar (Reporter)
- 09 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 9-
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று, அரசியலமைப்பின் கௌரவமும் சட்டத்தின் இறையாண்மையும் எப்போதும் பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் எனும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ருக்குன் நெகாராவின் இந்த இரு கொள்கைகளும் மிகவும் முக்கியமானவை எனவும், அவை நாட்டின் ஆட்சி, நிர்வாக நிறுவனங்களின் நேர்மை மீதான மக்களின் நம்பிக்கையை நேரடியாகப் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
"ஆட்சியதிகாரம் உள்ள சிலர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டால், மக்கள் ஏமாற்றம் அடைய உரிமை உண்டு," எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவுறுத்தல், பிரதமர் துறை (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட் இன்று இஸ்தானா நெகாராவில் அரசரைச் சந்தித்தபோது வெளியிடப்பட்டது.
அந்தச் சந்திப்பில், நாட்டின் தற்போதைய சட்டப் பிரச்சனைகள் குறித்து அரசருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, நல்லாட்சியை வலுப்படுத்துதல், நிறுவன சீர்திருத்தங்கள், ஊழலை எதிர்க்கும் முயற்சிகள் பற்றியும் தகவல் வழங்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



