3 வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்
- Sangeetha K Loganathan
- 22 Jan, 2025
ஜனவரி 22,
கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்திசையில் வந்த வாகனத்தையும் மற்றொரு லாரியையும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காலை 11.30 மணியளவில் குவாந்தானிலிருந்து செகாமாட் செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக ரொம்பின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Zamri Mohamad Zaber தெரிவித்தார்.
விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் லாரியில் இருந்தவர்களும் வாகனத்தில் இருந்தவர்களும் மேலதிகச் சிகிச்சைக்காக Muadzam Shah மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரிடம் சிகிச்சைக்குப் பின் விசாரணை நடத்தப்படுவதாகவும் ரொம்பின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Zamri தெரிவித்தார்.
Lima cedera dalam kemalangan melibatkan dua lori dan sebuah MPV di Jalan Kuantan-Segamat, Kampung Gadak. Lori dipercayai memasuki lorong bertentangan sebelum bertembung dengan lori lain dan MPV.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



