வாகன விபத்தில் 2 இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம்!
- THINAGAREN SANGGAREN
- 04 Apr, 2026
ஏப்ரல் 4,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது இளம்பெண்ணும் 18 வயது இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 19 வயது வாகனமோட்டி படுகாயம் அடைந்தார். இன்று அதிகாலை 4.25 மணிக்கு ஜொகூர் பாரு SULTAN ISKANDAR நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக வடக்கு ஜொகூர் மாகாணக் காவல் ஆணையர் RADIN RAMLAN தெரிவித்தார். படுகாயம் அடைந்த 19 வயது வாகனமோட்டி படுகாயத்துடன் SULTANAH AMINAH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்ளவதாக வடக்கு ஜொகூர் மாகாணக் காவல் ஆணையர் RADIN RAMLAN தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான PERODUA ATIVA வாகனம் அதிகாலை 4.25 மணிக்கு ஜொகூர் பாருவிலிருந்து தம்போய் நோக்கிச் செல்லும் சாலையில் அதிவேகமாகப் பயணித்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 16 வயது இளம்பெண்ணும் 18 வயது இளைஞரும் மலேசியர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் வடக்கு ஜொகூர் மாகாணக் காவல் ஆணையர் RADIN RAMLAN தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



