விபத்தில் இளம் காவல் அதிகாரி பலி!

- Sangeetha K Loganathan
- 10 Mar, 2025
மார்ச் 10,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலை 7 மணிக்குக் கெமிங்ஞேவிலிருந்து Batang Melaka செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் உயிரிழந்தவர் கோலா பீலாவில் உள்ள Tanjung Ipoh காவல் நிலையக் காவல் அதிகாரி என்றும் Tampin, மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார்.
முன்னிருந்த வாகனத்தை முந்திச் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த லாரியில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 33 வயது காவல் அதிகாரியின் உடல் பிரேதப்பரிசோதன்மைக்காக தம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் 32 வயது லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் Tampin, மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார்.
Seorang anggota polis maut selepas motosikal ditunggangnya bertembung dengan lori di KM 9 Jalan Gemencheh-Batang Melaka. Mangsa bertugas di Balai Polis Tanjung Ipoh mengalami kecederaan parah di kepala. Polis meminta saksi tampil membantu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *