நேரெதிரே மோதிய 2 கார்கள்! முதியவர் பலி! மற்றொருவர் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 26 Feb, 2025
பிப்ரவரி 26,
தம்பின் சாலையில் இரு கார்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் 68 வயதான முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 32 வயது மற்றொரு காரின் ஓட்டுநர் படுகாயம் அடைத்ததாகவும் தம்பின் மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார்.
நண்பகல் 1.45 மணிக்கு Jalan Sungai Kelamah சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் கட்டுப்பாட்டை இழந்த 32 வயதான ஓட்டுநரின் Perodua Bezza கார் எதிர்திசையில் வந்த 68 வயது முதியவரின் வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்த 32 வயது Perodua Bezza கார் ஓட்டுநர் கோலாபிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்வதாக தம்பின் மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார்.
Seorang lelaki berusia 68 tahun maut manakala pemandu lain cedera dalam kemalangan di Jalan Sungai Kelamah, Tampin. Kereta Perodua Bezza yang hilang kawalan bertembung dengan kenderaan mangsa. Pemandu cedera dirawat di hospital dan akan disoal siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



