விபத்தில் அக்கா தம்பி இருவரும் பலி!

- Sangeetha K Loganathan
- 08 Jan, 2025
ஜனவரி 8,
ஈப்போ நகரின் Pasir Puteh சாலையில் இன்று காலை 10.35 மணிக்குக் கட்டுப்பாட்டை இழந்த Toyota Vellfire வாகனம் நின்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 22 வயது Nur Amira Balqis Armi, 15 வயது Muhammad Armirul எனும் அக்கா தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
38 வயது பெண் ஓட்டி வந்த Toyota Vellfire வாகனம் சமிஞ்சை விளக்கில் நிற்காமல் மோட்டார் சைக்கிளில் நின்றுக் கொண்டிருந்தவர்களை மோதி, அருகில் உள்ள வணிகத்தளத்தையும் மோதி சேதப்படுத்தியதாக Ipoh மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
விபத்து குறித்தான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஈப்போ காவல்நிலையத்தில் தகவல் அளிக்கும்படி Ipoh மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad கேட்டுக்கொண்டார்.
Dua beradik, Nur Amira Balqis Armi, 22, dan Muhammad Armirul, 15, maut dalam kemalangan di Pasir Puteh, Ipoh, selepas Toyota Vellfire hilang kawalan dan merempuh motosikal yang berhenti. Polis sedang menjalankan siasatan lanjut mengenai kejadian tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *