லாரியை மோதிய கார்! தம்பதியர் பலி!

- Sangeetha K Loganathan
- 22 Jan, 2025
ஜனவரி 22,
கற்களை ஏற்றிச் சென்ற லாரியைக் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவியான 67 வயது Peranchis Nani, 69 வயது Raminah Tadam சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று நண்பகல் 1 மணியளவில் Kampung Berayung Baru, Jalan Trusan சாலையில் இவ்விபத்து நிழந்ததாக Lawas மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Clarence D. Primus Tiandun தெரிவித்தார்.
தம்பதியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து 10 டன் லாரியை மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. லாரி ஓட்டுநர் சிராய்ப்பு காயங்களுள்ளான நிலையில் வாகனத்தில் இருந்த தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
Pasangan warga emas maut dalam kemalangan di Kampung Berayung Baru, Lawas, selepas kereta mereka bertembung dengan lori batu. Mangsa meninggal di tempat kejadian akibat tersepit manakala pemandu lori hanya mengalami kecederaan ringan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *