2 லாரிகள் 1 வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 16 Apr, 2025
ஏப்ரல் 16,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் செனாவாங் அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதுடன் நால்வர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.37 மணிக்கு விபத்து தொடர்பான அவசர அழைப்பைப் பெற்றதும் 7 மீட்பு ஆணைய அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Senawang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Narul Ikram Nor தெரிவித்தார்.
10 டன் லாரியும் 3 டன் லாரியும் மைவி வாகனமும் விபத்தில் சிக்கியதாகவும் மைவி வாகனமோட்டி 2 லாரிகளுக்கிடையில் நசுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் Senawang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Narul Ikram Nor தெரிவித்தார். விபத்தில் மேலும் நால்வற்ற் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் Senawang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Narul Ikram Nor தெரிவித்தார்.
Kemalangan melibatkan dua lori dan sebuah kereta Myvi di Senawang mengorbankan seorang pemandu Myvi yang tersepit antara lori. Empat lagi cedera dan dirawat di hospital. Punca kemalangan masih disiasat pihak polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *