நேரெதிரில் மோதிய லாரிகள்! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 03 Jan, 2025
ஜனவரி 3,
இன்று காலை கூலிம் சாலையில் இரு லாரிகள் நேரெதிரில் மோது விபத்துக்குள்ளானதில் 38 வயது Rosidan Omar எனும் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் மற்றொரு லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் Zulkifli Azizan தெரிவித்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் லாரியின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் திசையில் வந்த மற்றொரு லாரியில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த 41 வயது மற்றொரு லாரி ஓட்டுநர் கூலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் Zulkifli Azizan தெரிவித்தார்.
Kemalangan maut melibatkan dua lori di Jalan Kulim menyebabkan seorang pemandu, Rosidan Omar, 38, meninggal dunia, manakala seorang lagi cedera. Kemalangan berlaku akibat tayar lori meletup.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *