சாலை விபத்தில் இரு பெண்கள் பலி! மூவர் படுகாயம்! – ஜொகூர்!
- Thinagaren Sanggaren
- 04 Jan, 2026
ஜனவரி 4,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 74 வயது பெண்ணும் 42 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மூவர் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு 8.15 மணிக்குத் தங்காக்கிலிருந்து Bukit Serampang செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார். HONDA CITY , Mitsubishi Triton ஆகிய இரு வாகனமும் நேருக்கு நேர் மோதியதால் சம்பவ இடத்திலேயே இரு பெண்களும் உயிரிழந்ததாகவும் படுகாயம் அடைந்த மூவரும் Tangkak மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார்.
ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற Mitsubishi Triton வாகனம், சாலையின் நடுவே நின்றுக் கொண்டிருந்த எருமை மாட்டின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த HONDA CITY வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார். படுகாயம் அடைந்த வாகனமோட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



