இருவாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலி! நால்வர் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 04 Mar, 2025
மார்ச் 4,
கோத்தா திங்கியிலிருந்து குளுவாங் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வந்த வாகனத்தை நேரெதிரே மோதியதில் 52 வயது பெண் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயம் அடைந்ததாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். காலை 7 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் படுகாயம் அடைந்த நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோத்தா திங்கியிலிருந்து குளுவாங் நோக்கி செல்லும் சாலையில் பயணித்த Proton Saga FL வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த Perodua AXIA வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. Proton Saga FL வாகனத்தின் ஓட்டுநரும் அவருடன் இருந்த இருவர் உட்பட Perodua AXIA வாகனமோட்டியும் படுகாயம் அடைந்த நிலையில் Perodua AXIA வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த 52 வயது பெண் உயிரிழந்ததாகவும் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh விளக்கமளித்தார்.
Seorang wanita berusia 52 tahun maut manakala empat lagi cedera dalam kemalangan di Jalan Kota Tinggi-Kluang. Proton Saga FL hilang kawalan dan bertembung dengan Perodua Axia yang dipandu seorang jururawat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



