விபத்தில் ஒருவர் பலி! இருவர் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 31 Dec, 2024
டிசம்பர் 31,
நேற்றிரவு கோத்தா பாருவிலிருந்து கோலா திரங்கானு நோக்கி செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 34 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 46 வயது ஆடவரும், 23 வயது மற்றொரு வாகனமோட்டியும் பலத்த காயம் அடைந்ததாக Setiu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zain Mat Dris தெரிவித்தார்.
23 வயது இளைஞர் செலுத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்தை மோதியதில் இந்த விபத்து நிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் Setiu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zain Mat Dris தெரிவித்தார்.
Lelaki berusia 34 tahun maut, manakala dua lagi cedera parah dalam kemalangan di jalan Kota Bharu-Kuala Terengganu. Siasatan awal mendapati kereta dipandu pemuda 23 tahun hilang kawalan dan melanggar kenderaan lain. Mangsa cedera dirawat di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



