விபத்தில் மகன் பலி! தந்தை படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 09 Mar, 2025
மார்ச் 9,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னால் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டியான 49 வயது தந்தை படுகாயம் அடைந்ததுடன் 16 வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு 7.45 மணிக்கு Padang Besar சாலையில் நிகழ்ந்ததாக Padang Besar மாவட்டக் காவல் ஆணையர் Sarih Salleh தெரிவித்தார்.
Beseri மசூதியில் தொழுகைக்குப் பின்னர் வீடு திரும்பும போது இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் 33 வயது ஆடவர் செலுத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதியதாகவும் 16 வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் Sarih Salleh தெரிவித்தார். விபத்திற்குக் காரணமான 33 வயது வாகனமோட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
Seorang remaja lelaki berusia 16 tahun maut manakala bapanya cedera selepas motosikal mereka dirempuh sebuah kereta yang hilang kawalan di Padang Besar. Pemandu kereta berusia 33 tahun kini menerima rawatan dan siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



