ஆற்றில் விழுந்த ஆடவரைப் பொதுமக்கள் மீட்டனர்! – AMPANG

top-news

டிசம்பர் 2, 

அம்பாங்கிலிருந்து கோலாலம்பூர் செல்லும் சாலையின் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி ஆற்றில் விழுந்ததாக நம்பப்படுகிறது. மழையின் காரணமாக ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 1.20 மணியளவில் தனது மனைவி மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புச் சுவரை மோதியது.

விபத்தின் போது ஆடவர் நிலை தடுமாறி பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. சுற்றி இருந்த பொதுமக்கள் விரைந்து ஆற்றில் விழுந்த ஆடவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட ஆடவரின் கால் எலும்பு முறிந்ததாகவும், மனைவிக்கும் மகளுக்கும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டது.

Seorang penunggang motosikal patah kaki kanan selepas tercampak ke sungai dalam kemalangan di AKLEH. Isteri dan anaknya cedera ringan. Mangsa diselamatkan orang ramai dan bomba sebelum dibawa ke hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *