4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் பலி!

- Sangeetha K Loganathan
- 26 Feb, 2025
பிப்ரவரி 26,
நீலாய் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் தொழில்நுட்ப வல்லுநரான 23 வயது இளம்பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.25 மணிக்கு விபத்து குறித்தானத் தகவல் கிடைத்ததாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார்.
விபத்தில் 2 லாரிகள் 2 கார்கள் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் 34 வயது வோல்வோ லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து புரோட்டோன் சாகா வாகனத்தையும் நீசான் லாரியையும், புரோட்டோன் வாஜா காரையும் மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில் புரோட்டோன் சாகா காரின் ஓட்டுநரான 23 வயது இளம்பெண் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Sebuah lori yang hilang kawalan di Jalan Nilai menyebabkan kemalangan membabitkan empat kenderaan serta mengorbankan seorang wanita berusia 23 tahun. Polis mengesahkan punca kemalangan berpunca daripada lori Volvo yang merempuh tiga kenderaan lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *