விபத்தில் ஓட்டுநர் பலி! முதியவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையிலிருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலியானதுடன் உடனிருந்த முதியவர் படுகாயம் அடைந்தார்.
சிரம்பானில் உள்ள Nusari Aman மலையிலிருந்து Rasah நோக்கி பயணித்த Proton Iriz ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டி 10 மீட்டர் உயரத்திலிருந்து கீழே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என Seremban மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரித்தார்.
வாகனமோட்டியான 36 வயது ஆடவர் விபத்தில் படுகாயம் அடைந்த 60 வயது மூதாட்டியின் மகன் என அவர் உறுதிப்படுத்தினார். விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி Tuanku Jaafar மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்குப் பின் விசாரணையைத் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Proton Iriz hilang kawalan dan terjunam 10 meter dari bukit di Seremban, menyebabkan pemandu lelaki berusia 36 tahun maut dan ibunya yang berusia 60 tahun cedera. Mangsa kini dirawat di Hospital Tuanku Jaafar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *