பாஸ் – பெர்சத்து மோதல் எதிரணிக்கு சாதகம்? “பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும்” - டத்தோ ரஸாலி இட்ரிஸ் அழைப்பு
- Surendran Sumdraraj
- 25 May, 2026
கோலாலம்பூர், மே 25-
பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கு இடையே உருவாகியுள்ள கருத்து வேறுபாடுகள், எதிரணிக்கு மட்டுமே பலனளிக்கும் என்றும், பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் ஒற்றுமையை சிதைக்க முயற்சிக்கும் தரப்புகளுக்கு இது வாய்ப்பாக மாறக்கூடும் என்றும் பெர்சத்து திரெங்கானு தலைவர் Datuk Razali Idris தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் மற்றும் கருத்து முரண்பாடுகள் விவேகத்துடனும் பெருந்தன்மையுடனும் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவது தான் சிறந்த தீர்வாகும். இரு தரப்பும் வெற்றி பெறும் வகையிலான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சகோதரத்துவ உணர்வு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒரே இலட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி தொடர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மேலும், “எந்த உறவாக இருந்தாலும் அதில் பலமும் பலவீனமும் இருக்கும். எனவே தற்போதைய சூழ்நிலையை மீளாய்வு செய்வது அவசியம். நல்ல அம்சங்களை மேலும் வலுப்படுத்தி, குறைகளை சரிசெய்ய வேண்டும்,” என்றும் ரஸாலி இட்ரிஸ் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



