மக்கள் இலகுவாக அணுகும் அமைச்சாக என் அமைச்சு இருக்கும்! – துணை அமைச்சர் யுனேஸ்வரன் உறுதி!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 5,

மலேசிய மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் நிலைநிறுத்தவும் உறுதிக்கொண்டிருக்கும் ஒற்றுமை அமைச்சு மக்கள் இலகுவாக அணுகும் ஒர் அமைச்சாக இருக்கும் என தேசிய ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் Yuneswaran Ramaraj உறுதியளித்தார். ஒற்றுமை அமைச்சின் தகவல் தொடர்பு பிரிவுடனான சந்திப்பைத் தாம் நிகழ்த்தியிருப்பதாகவும் அமைச்சின் முக்கிய நடவடிககைகளுடன் மக்களுக்குப் பயனான செயல்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கும் முக்கிய பொறுப்பைக் கொண்டிருக்கிறோம் என துணை அமைச்சர் Yuneswaran Ramaraj தெரிவித்தார

பல்லின மக்களிடையிலான சமத்துவத்தையும் இன மத நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதில் ஒற்றுமை அமைச்சு உறுதிப்பூண்டுள்ளதாக துணை அமைச்சர் Yuneswaran Ramaraj தெரிவித்தார். தொலைநோக்குகள் நிறைந்த செயல்திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தடையின்றி மக்களைச் சென்றடைவதில் துணை அமைச்சராகத் தாம் முக்கிய கவனம் செலுத்தவிருப்பதாகவும் அதன் தொடர்புடைய அதிகாரிகளின் செயல்திட்டங்கள் குறித்தும் விரிவுப்படுத்தியிருப்பதாகவும் துணை அமைச்சர் Yuneswaran Ramaraj தெரிவித்தார்

2026 முதல் காலாண்டின் முக்கிய பணிகளுக்கான அட்டவணைகள் அரசின் நிகழ்ச்சி நிரல்களுடன் முறைப்படுத்தி வருவதாகவும் ஊடகத்தின் பங்களிப்பும் அமைச்சின் செய்திகள் குறித்தும் அதிக கவனம் கொள்ளப்படும் என துணை அமைச்சர் Yuneswaran Ramaraj தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *