உலகளவில் ரூ.82 கோடி வசூல் செய்த கென் கருணாஸின் ‘யூத்’ படம்
- Surendran Sumdraraj
- 17 Apr, 2026
சென்னை: நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் உலகளவில் ரூ.82 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த செலவில் உருவான இப்படம் எதிர்பாராத அளவில் பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆரம்ப நாளிலேயே பல கோடி வசூலை ஈட்டிய இப்படம், முதல் சில நாட்களிலேயே ரூ.8 கோடியை கடந்தது.
பின்னர் வாரங்களிலும் தொடர்ந்து நல்ல வசூல் நிலையை தக்க வைத்துக்கொண்ட ‘யூத்’ திரைப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.40 கோடியை கடந்ததாகவும், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய லாபத்தை ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.
இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், காதல், நட்பு மற்றும் பள்ளி வாழ்க்கை போன்ற அம்சங்களை சுவாரஸ்யமாக எடுத்துரைத்துள்ளது. இதனால், இளைஞர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



