கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
- Surendran Sumdraraj
- 10 Apr, 2026
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்). இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எல்லாவித அம்சங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும்தான் இது போன்ற கருத்துக்கள் பொருந்தும் பழங்காலத்து கோயில்களில் இது 100 சதவிகிதம் நம்பும்படியாக உள்ளது.
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான இட அமைப்பு. இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள் மலைத்தளங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்களில் தான் இதன் அடையாளம். கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும் நேர்மறை ஆற்றலும் அதிகம் இருக்கும் இது வடக்கு தெற்கு திசை போல் இருக்கும் முக்கிய சிலைகள் மட்டும்தான் இந்த மையப் பகுதியில் வீற்றிருக்கும் இதை நாம் கற்பக் கிரகம் அல்லது மூலஸ்தானம் என்று கூறுவோம் இந்த மூலஸ்தானம் இருக்கும் இடத்தில் தான் இது அதிகம் காணப்படும் இதுதான் அந்த காந்தம் மற்றும் நேர்மறை ஆற்றல் (பாசிட்டிவ் எனர்ஜி) அமைந்திருக்கும். பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயமாக உருவாகும் பிறகுதான் கோயில் உருவாகும் நிறைய கோயில்களில் கர்ப்ப கிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கும் அது எதற்கு தெரியுமா இது தான் கீழே இருக்கும் அந்த நேர்மறை ஆற்றலை அப்படியே பன்மடங்காக்கி வெளிக்கொணரும்.
எல்லா மூலஸ்தானங்களிலும் மூன்று பக்கமும் மூடி வாசல் மட்டும் திறந்திருக்கும் அளவுக்கு கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும் இது அந்த எனர்ஜியை இழக்கச் செய்யாமல் இடது மற்றும் வலது புறத்திலிருந்து இறைவனை வணங்குபவர்களுக்கு இந்த ஆற்றலை கிடைக்கும் படியாக செய்யும். நாள் தவறாமல் அன்றாடம் கோயில்களுக்கு செல்பவர்களுக்கு இதை உணர முடியும் கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து பலமாய் சுற்றி வரும் போது நேர்மறை ஆற்றல் மூலஸ்தானத்திலிருந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும் இந்த காந்தம் மற்றும் ஒருவித நேர்மறையான மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான உற்சாகத்தையும் ஆற்றலையும் கொடுக்கும்.
மூல ஸ்தானத்தில் ஒரு சுடர் விளக்கு கண்டிப்பா தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் விக்கிரகத்திற்கு பின்புறம் ஒரு விளக்கு அதை சுற்றி கண்ணாடி அது செயற்கை ஒளிவட்டம் வருவதற்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படியே உள்வாங்கி வெளிக்கொணரும். மந்திரம் உச்சரிக்கும் போதும் மணி அடிக்கும் போதும் அபிஷேகம் செய்யும்போதும் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி அபரிதமான எனர்ஜி ஆற்றலை வழங்குவது தான் இந்த மூலஸ்தானம். நம் இல்லங்களில் இது போன்ற வழிபாடுகள் செய்யும் போது இந்த ஆற்றல் கிடைப்பதில்லை இது கருங்கல் சிலை அதாவது கற்ப கிரகத்திற்கு மட்டும் பொருந்தும். கோயிலில் உள்ள கற்பகிரகம் எத்தனை வருடம் பால் தயிர் பஞ்சாமிருதம் தேன் சந்தனம் குங்குமம் உறுதி மற்றும் என்னை சிகக்காய் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் என்றுமே மறக்கத்தான் செய்யும்.
சொர்ணாபிஷேகம் செய்யும்போதும் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொண்டே செல்லும். பூக்கள் கற்பூரம் துளசி குங்குமப்பூ கிராம்பு இதை சேர்த்து செம்பில் வைக்கப்பட்டு கொடுக்கும் தீர்த்தம் வரை ஒருவித சுவையை கொடுக்கும். இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம் இதை வழக்கமாக உட் கொண்டவர்களுக்கு இது ஒரு நுண்ணுயிர் எதிர்பியாக செயல்படும் இதை மூன்று முறை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக என்று பொருள்படும். இன்று ஆயிரம் பற்பசை இருந்தாலும் கிராம்பு துளசி வேம்பின் சூத்திரத்தில் தயாரிக்கும் காரணம் இந்த தீர்த்தம் வாய் நாற்றம் பல் சுத்தம் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு கலவை தான் இந்த தீர்த்தம். முன்பெல்லாம் கோயிலுக்கு தினமும் சென்று வந்த பக்தர்களுக்கு எந்த வித நோயும் தொற்றியது இல்லை என்பதற்கு இதுதான் முக்கிய காரணம் .
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்திரம் சாத்தும் போதும் மகா தீபா தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் கதவை திறப்பதன் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் ஓட்டு மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும்போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கு இதுதான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இதுதான் நிறைய பெண்களுக்கு ஆண்களைப் போன்று இதய நோய் வராமல் இருக்க காரணம் இந்த தங்க உலோகம்( நகை) இதயத்தின் வெளியே நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு நம்பிக்கை. மாங்கல்யம் கார் சாவி மற்றும் புது நகைகள் இவற்றையெல்லாம் இந்த கற்ப கிரகத்தில் வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் அதன் எனர்ஜியை அப்படியே பற்றி கொள்ளுமாம்.
கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்கும் கம்பி இல்லா நேரடி தொடர்பு உண்டு என்றால் அது மிகையாகாது கோயிலின் மேல் இருக்கும் கலசம் உறுதியாக இருக்க இதுதான் காரணம். கீழிருந்து கிளம்பும் அந்த காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் உறுதியாக மாற்றும் திறன் படைத்தது கோயிலில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தியாகும் இதுதான் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட மின் கைதுகள் . கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இதுதான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு தொழில்நுட்ப உற்பத்தியாகும். கோயில் கதவுகள் மரத்தில் செய்யப்பட்டதன் காரணம் எல்லாவித உயர் மின் அழுத்தமும் நடுநிலை செய்யும் ஒரு சிறப்பு இதில் உண்டு என்பதால் தான் இந்த கதவுகள் மரத்தினால் செய்யப்படுகின்றது என்று சொல்லப்படுகிறது. இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒளியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை சார்ந்த விஷயம்தான.
இரு வேலைகளும் கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சில கோயில்களில் இரண்டு அல்லது நான்கு வாசல்கள் இருக்க காரணம் இந்த நேர்மறை ஆற்றல் நம் உடலில் கலந்த அதை அப்படியே நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் வழிபாடுகள்.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



