அன்வார் இப்ராஹிம்: “என்னுடன் பழைய தொடர்பு இருந்ததால் மட்டும் வழக்குகளை மீண்டும் தோண்டுவது அநீதி”

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், டிச.2-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தம்முடன் முன்பு பணியாற்றிய எவர்மீதும் தொடர்புடைய வழக்குகள் ஏற்கெனவே அதிகாரிகளால் “மேல் நடவடிக்கை இல்லை” என முடிவு செய்யப்பட்ட பின்னரும், அவர்களுடன் தாம் ஒரு காலத்தில் தொடர்பு கொண்டிருந்ததால் மட்டுமே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

சபா மாநிலத்தில் 70,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கனிம வள விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட தொழிலதிபர் டத்தோஸ்ரீ பர்ஹாஷ் வாபா சால்வடோர் வழக்கை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு ஏற்கெனவே துணை பொது குற்றவியல் தலைவரால் “மூடப்பட்டது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

“பர்ஹாஷ் எனது அலுவலக ஊழியர் அல்ல; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிகேஆர் தலைவரின் அரசியல் செயலாளராக மட்டுமே பணியாற்றினார். அந்த ஒரே தொடர்புக்காக என்னை இழுத்து வழக்கை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோருவது முற்றிலும் அநீதி” என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *