பாஸ்–பெர்சத்து உறவு விவகாரம்; “அடுத்த வாரம் நான் பேசுகிறேன்” – அப்துல் ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

மாராங், ஜூன் 19 –

பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கிடையிலான உறவு, கூட்டணியின் எதிர்காலம் மற்றும் மாநிலத் தேர்தல் தொடர்பான அரசியல் பரபரப்புகள் குறித்து பாஸ் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தற்போது கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

இன்று ருசிலா பள்ளிவாசலில் நடைபெற்ற துஹா மார்க்க சொற்பொழிவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்குள் நிலவி வரும் விவகாரங்கள் குறித்து தற்போது எந்த கருத்தையும் வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

குறிப்பாக, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள் தனித்தனியாக தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்தி வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே “பிளவு” ஏற்படுமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. மேலும், ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பான விவாதங்களும் கவனம் பெற்றுள்ளன.

இருப்பினும், இந்த விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஹாடி அவாங், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் மற்றும் பாஸ் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சுரி முக்தார் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாக கூறினார்.

“இப்போது சம்சுரியின் அறிக்கையே போதுமானது. அடுத்த வாரம் எனது முறை வரும்; அப்போது நான் கருத்து தெரிவிப்பேன்,” என்று அவர் சுருக்கமாகப் பதிலளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *