நில வரி சர்ச்சை: டிஏபி தலையீடு – இரு தலைவர்களுக்கும் சந்திப்பு ஏற்பாடு

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ்டவுன், மார்ச் 21-

பினாங்கில் நில வரி உயர்வு தொடர்பாக நீடித்து வரும் சர்ச்சையைத் தீர்க்க, டிஏபி பொதுச்செயலாளர் அந்தோனி லோக், முதல்வர் சௌ கொன் யோ மற்றும் முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பை ஏற்பாடு செய்ய உள்ளார்.

இரு முக்கிய தலைவர்களுக்கிடையே வெளிப்படையாக நடைபெறும் வாக்குவாதம் ஆரோக்கியமற்றதுடன், தற்போதைய பொருளாதார மற்றும் புவியியல் அரசியல் அசாதாரண நிலைமையில் இது ஏற்றதல்ல என கட்சியின் மத்திய தலைமையகம் கவலை தெரிவித்துள்ளது.

“அரசாங்கத்தை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, எந்தவொரு கருத்து வேறுபாடும் உள்ளக அமைப்புகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். அதை வெளிப்படையாக பகிர்வது சரியான நடைமுறை அல்ல,” என அந்தோனி லோக் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

மேலும், மாநில அரசின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய வணிகப் பகுதிகளில் நில வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்வது அவசியம் என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அந்த அணுகுமுறை சமநிலையுடனும், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *