லங்காவி feri சேவை குறைப்பு: சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்க்கை பாதிப்பு – அரசின் தலையிட கோரிக்கை

top-news
FREE WEBSITE AD

லங்காவி, ஏப். 20

லங்காவி தீவிற்கு செல்லும் பேரி சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா துறையும், உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்வும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசு உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குவா பயணிகள் ஜெட்டி முன்பு நேற்று மாலை நடைபெற்ற அமைதியான பேரணியில், பல அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த பிரச்சினையை முன்வைத்தனர். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், பேரி சேவை குறைப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

 Anak Muda MADANI Kedah தலைவர் Datuk Zuraidi Rahim கூறுகையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பேரி சேவைகள் தினசரி ஐந்து முறை இருந்து மூன்று முறையாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக லங்காவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சேவை குறைப்பு, குறிப்பாக சுற்றுலா துறையை சார்ந்து வாழும் சிறு தொழில்முனைவோர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. “இந்நிலை மேலும் ஒரு அல்லது இரண்டு மாதங்கள் நீடித்தால், லங்காவி பொருளாதாரம் மேலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது” என அவர் எச்சரித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *