மின்சாரக் கட்டண உயர்வு: உடனடி நிவாரண நடவடிக்கை குறித்து நாளை சிறப்பு கூட்டம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 16-

 மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைப்பதற்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆராய, நாளை சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு (PETRA), எரிசக்தி ஆணையம் (ST), தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் நிதி அமைச்சு (MOF) ஆகிய தரப்புகள் பங்கேற்கவுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், அண்மையில் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் வெளிப்படுத்தி வரும் கவலைகள் மீது தமது கவனம் திரும்பியுள்ளதாக அவர் கூறினார்.

“மக்கள் முன்வைத்துள்ள குறைகளையும் கவலைகளையும் நான் கேட்டுள்ளேன். இந்த விவகாரத்திற்கு உடனடி கவனம் செலுத்தப்பட்டு, விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்,” என்று பிரதமர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *