ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலகினால், டி.ஏ.பியும் வெளியேறும்!
- Thinagaren Sanggaren
- 04 Jan, 2026
ஜனவரி 4,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேறுவதாக முடிவெடுத்தால் டி.ஏ.பி கட்சி மலாக்கா மாநிலத்தில் வழங்கி வரும் ஆதரவை மீட்டுக்கொள்ளும் என மலாக்கா மாநில டி.ஏ.பி செயலாளரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான Allex Seah Shoo Chin எச்சரிக்கை விடுத்தார். மலாக்கா மாநிலத் தொழில்முனைவோர் மேம்படு கூட்டுறவு, பயனீட்டாளர் ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கும் Allex Seah Shoo Chin மலாக்காவில் பக்காத்தான் பாரிசான் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதை அம்னோவுக்கு நினைவூட்டியுள்ளார்.
நேற்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவரும் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ அக்மால் சலே, டி.ஏ.பியை மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறும்படி வலியுறுத்தியதும் Allex Seah Shoo Chin மலாக்காவில் பாரிசானுடன் இணைந்து இருக்க வேண்டுமா, அல்லது வெளியேற வேண்டுமா என்கிற இறுதி முடிவை டி.ஏ.பியின் தலைமையிடம் விட்டு விடுவதாகத் தெரிவித்தார்.
கடந்த 2021 நடைபெற்ற மலாக்கா மாநிலங்கவை சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தானும் பாரிசானும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு பாரிசான் 21 சட்டமன்றங்களிலும் பக்காத்தான் 5 சட்டமன்றங்களிலும் பெரிக்காத்தான் 2 சட்டமன்றங்களிலும் என மொத்தம் 28 சட்டமன்றங்களில் 21 சட்டமன்றங்களில் பாரிசான் வெற்றிப் பெற்று மலாக்காவில் ஆட்சி அமைத்தது. ஆனால், 2022 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மலாக்காவில் உள்ள 6 நாடாளுமன்றங்களிலும் பாரிசான் படுதோல்வி அடைந்ததை அடுத்து பக்காத்தானுடன் இணைந்து 26 சட்டமன்றங்கள் எனும் பெரும்பான்மையில் மலாக்காவில் ஒற்றுமை கூட்டணியின் ஆட்சி அமைக்கப்பட்டது.
தற்போது டி.ஏ.பி மலாக்காவின் ஆட்சியிலிருந்து விலகினாலும் 21 சட்டமன்றப் பெரும்பான்மையுடன் பாரிசான் தொடர்ந்து மலாக்காவில் ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



