பிற மத நடவடிக்கைகளுக்குக் கட்டுபாடுகள் ஏதுமில்லை! ஒருமைப்பாட்டு அமைச்சர் விளக்கம்!

top-news

பிப்ரவரி 12,

பிற மதத்தினரின் சமய நடவடிக்கைகளில் பங்கேற்க எந்தவொரு கட்டுப்பாடுகளை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang விளக்கமளித்தார். பிற மதத்தினரின் நடவடிக்களில் பங்கேற்பது இன மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என்பதை நினைவுருத்திய அவர் அதுமாதிரியானக் கட்டுப்பாடுகள் சுய சிந்தனையின் அடிப்படையில் பிற மதச் சமய நடவடிக்கைகளில் பங்கேற்கும் தனிநபர் விருப்பத்திற்குட்பட்டது என Datuk Aaron Ago Dagang தெரிவித்தார். 

தாங்கள் பின்பற்றும் நம்பிக்கையை ஏற்று வாழும் பல்லின மக்கள் மற்றவர்களின் சமய நடவடிக்கைகளில் பங்கேற்பது தனிநபர் விருப்பம் என்பதை ஒற்றுமை அரசாங்கம் உணர்வதாகவும் பிற மத நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயல்படுவதாகவும் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார். தற்போது மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தைச் சிதைக்காமல் அதனூடே அரசாங்கம் பயணித்தால் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பதாகவும் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.

Menteri Perpaduan Negara Datuk Aaron Ago Dagang menjelaskan bahawa kerajaan tidak menetapkan sekatan terhadap penyertaan individu dalam aktiviti keagamaan penganut lain. Beliau menegaskan penyertaan tersebut adalah pilihan peribadi dan bertujuan memperkukuh keharmonian kaum.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *