SPRM தலைவர் அசாம் பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகள்: விசாரணைக்காக சிறப்பு குழு அமைத்தது அரசு
- Tamil Malar (Reporter)
- 13 Feb, 2026
புத்ராஜெயா, பிப். 13-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைவர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பாக எழுந்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை விசாரிக்க, அரசு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை அரசின் செய்தித் தொடர்பாளர் டத்தோக் பஹ்மி பட்சில் கூறுகையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அசாம் பாக்கி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக ஆராய்வதற்காகவே இந்த சிறப்பு குழு உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு குழுவின் தலைவராக தேசிய தலைமைச் செயலாளர் (Ketua Setiausaha Negara), டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் நியமிக்கப்படுவார் என்றும் பஹ்மி கூறினார்.
“இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் SPRM தலைவர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சிறப்பு குழுவை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது,” என அவர் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



