டத்தோவின் சொகுசு வாகனத்தில் ரோஹிங்யா அகதி? - JPJ மலாக்கா!
- THINAGAREN SANGGAREN
- 23 May, 2026
மே 23,
மலாக்காவில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமான JPJ மேற்கொண்ட வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது சொகுசு வாகனத்தை ஓட்டி வந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். சம்மந்தப்பட்ட TOYOTA VELLFIRE வாகனம் ஒரு டத்தோவுக்கு சொந்தமானது என்றும், வாகனமோட்டி ROHINYA அகதி என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மலாக்கா மாநில சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் Siti Zarina Mohd. Yusop தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட Toyota Vellfire வாகனத்திற்கு சாலை உரிமம் இல்லை என்றும், ரோஹிங்யா ஆடவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதாலும் வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன் ரோஹிங்யா ஆடவரையும் கைது செய்திருப்பதாக Siti Zarina Mohd. Yusop தெரிவித்தார். தொடர்ந்து இச்சோதனையில் 7 சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வாகன உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் மலாக்கா மாநில சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் Siti Zarina Mohd. Yusop தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



