தீயில் கருகிய கார்! காயத்துடன் தப்பிய ஓட்டுநர்!

top-news

நவம்பர் 25.

Kampung Bukit, Pokok Sena பகுதியில் PERDUA ALZA ரக வாகனம் திடீரென தீயில் கருகியது. காலை 8.15 மணியளவில் அவசர அழைப்புப் பெற்றதாக Kota Setar, மாவட்டக் காவல் ஆணையர் Syed Basri Syed Ali தெரிவித்தார். தீ பிடித்த வாகனத்திற்குள் வாகனமோட்டி மயங்கிய நிலையில் இருந்ததாகவும் பொதுமக்கள் அவர் மீட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

வாகனத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வாகனம் தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தில் தீயினால் ஏற்பட்ட புகையால் 23 வயது இளைஞர் மயங்கியதாகவும் அவரின் கழுத்து, கை பகுதிகளில் தீ காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீ பிடிக்கும் முன்னதாகச் சம்மந்தப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் அந்த விபத்தில் அவர் மயங்கியிருக்க கூடும் என Syed Basri Syed Ali தெரிவித்தார்.

Seorang lelaki 23 tahun selamat selepas kereta Perodua Alza dipandunya terbabas dan terbakar di Jalan Kampung Bukit, Pokok Sena. Mangsa cedera ringan dan dirawat di Hospital Kuala Nerang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *