வெள்ளத்தால் RM 6 BILLION இழப்பு! – DOSM

- Sangeetha K Loganathan
- 01 Dec, 2024
டிசம்பர் 1,
கடந்த ஆண்டுகளில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் RM 6 BILLION வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய புள்ளியியல் துறையான Department of Statistics Malaysia அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் ஒவ்வோர் ஆண்டும் சீர்குலைவதாகத் தேசிய புள்ளியியல் துறையின் தலைமை இயக்குநர் Datuk Seri Dr Mohd Uzir Mahidin தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைப்பது, பொருள் சேதம், இழப்பீடுகள், நிவாரண மையங்கள், மீட்புப் பணிகள் என பல்வேறு பிரிவுகளாக ஒவ்வோர் ஆண்டும் செலவளிக்கப்படுவதாகவும் கடந்த ஆண்டு RM755 Million இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு RM 1.03 BILLION இழப்பு ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உள்நாட்டு வருவாய் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும் என்றும், வெள்ளத் தடுப்பு திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என தேசிய புள்ளியியல் துறையின் தலைமை இயக்குநர் Datuk Seri Dr Mohd Uzir Mahidin கேட்டுக்கொண்டார்.
Malaysia mengalami kerugian lebih RM6 bilion akibat banjir dalam beberapa tahun, termasuk kerosakan infrastruktur dan harta benda. Keadaan ini memerlukan langkah pengurusan bencana yang lestari serta penyelesaian segera untuk mengurangkan impak kos baik pulih dan kerosakan masa depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *