சிலாங்கூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் 70 விழுக்காடு அதிகரிப்பு
- Surendran Sumdraraj
- 04 Aug, 2026
ஷா ஆலாம், ஆக. 4-
சிலாங்கூர் மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோக (Amang Seksual Fizikal) வழக்குகள் கடந்த 2021 முதல் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை செயற்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைப் பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அதிகாரிகளிடம் புகார் அளிக்க முன்வருவது அதிகரித்திருப்பதையும் இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என அவர் கூறினார்.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கற்பழிப்பு சம்பவங்களே மிகவும் தீவிரமான குற்றமாகப் பதிவாகியுள்ளது. இந்தக் காலத்தில் மொத்தம் 1,845 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, 1,654 உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அன்ஃபால் சாரி தெரிவித்தார். இந்த எண்ணிக்கைகள் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசு தொடர்ந்து கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன என அவர் மேலும் சொன்னார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



