பொதுமக்கள் முன்னிலையில் நபரை வெட்டிக்கொலைச் செய்த வழக்கு: 3 பேருக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், மே 12-

ஜொகூர் மாநிலம் தங்காக் பகுதியில் கடந்த மார்ச் மாதம் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில், ரகசிய கும்பல் உறுப்பினர் உட்பட மூவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட Pan Wei Siang (24), Henry Lau Yi Sheng (26) மற்றும் Tan Ah Chai (32) ஆகியோர் மீது மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் Lee Kim Kiat முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, மூவரும் அதனை புரிந்துகொண்டதாகத் தெரிவித்தனர்.

எனினும், கொலை வழக்குகள் உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டவை என்பதால், குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்த ஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிகையின் படி, கடந்த மார்ச் 13ஆம் தேதி மாலை 7.20 மணியளவில், சுங்கை மாதி, புக்கிட் காங்கார், பாது 9 பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே Tong Wee Sheng (38) என்பவரை மூவரும் மேலும் தப்பியோடியுள்ள ஒருவருடன் சேர்ந்து தாக்கி கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *