மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் உயிரிழப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நஷ்டஈடு வழங்க சட்டம் வலுப்படுத்த வேண்டும்
- Surendran Sumdraraj
- 30 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 30-
மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் சிறைத்தண்டனை மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாது என்று மத போதகர் உஸ்தாஸ் வாடி அனுவார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பம், குறிப்பாக மனைவி மற்றும் குழந்தைகள், வருமான ஆதாரத்தை இழந்து கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதால், தற்போதைய சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக நஷ்டஈடு (தியாத்) வழங்கும் வகையில் சட்டம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். “சட்டம் வலுப்படுத்தப்பட்டு, நஷ்டஈடு விரைவாகவும் சுமையின்றியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சென்றடைய வேண்டும்,” என்று அவர் இன்று தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நேற்று சிலாங்கூரின் கிள்ளான் பகுதியில் உள்ள ஜாலான் ராயா பாராட் சாலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



