வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவர் வெடி பொருள்களுடன் கைது!
- Thinagaren Sanggaren
- 16 Jan, 2026
ஜனவரி 16,
கோத்தா பாருவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பையைத் திருடிய் ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்த போது அவரது வீட்டிலிருந்த வெடி பொருள்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயது உள்ளூர் ஆடவரைக் காவல் துறையினர் கடந்த 12 ஜனவரி கைது செய்த நிலையில் நேற்று கோத்தா பாரு Sesyen நீதிமன்றத்தின் விசாரணையின் போது தன் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஜனவரி 10 கோத்தா பாருவில் உள்ள Jalan Dato' Perdana சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த ஒரு தம்தியரின் கைப்பயைப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளோட்டி திருடியதாகப் பாதிக்கப்பட்ட பெண் கோத்தா பாரு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சந்தேக நபரான 43 வயது உள்ளூர் ஆடவர் Gok Kapur குடியிருப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது அவரின் வீட்டிலிருந்த வெடி பொருள்களும் ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணையை ஜனவரி 27 தொடரும்படி கோத்தா பாரு Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



