தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு -திறமையும் அனுபவமும் கொண்ட மனித வளத்தை வீணடிக்கும் செயல் - அம்னோ மகளிர் பிரிவு
- Tamil Malar (Reporter)
- 15 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 15-
தேர்தல்களில் அம்னோ மகளிர் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் புறக்கணிக்கப்படுவது கட்சியின் உள் பலத்தை முறையாக நிர்வகிக்கத் தவறியதற்கான தெளிவான அறிகுறி என கடுமையாக விமர்சித்துள்ளது. இது வெறும் அரசியல் தவறல்ல, மாறாக திறமையும் அனுபவமும் கொண்ட மனித வளத்தை வீணடிக்கும் செயலாகும் என்றும் அம்னோ மகளிர் பிரிவு கருத்து தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த அந்தப் பிரிவின் தகவல் பிரிவி தலைவர் சுபாய்டா சுராடி, மகளிர் பிரிவு உறுப்பினர்களே கட்சியின் மிகவும் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்து, தேர்தல் காலங்களில் களத்தில் இறங்கி முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக கூறினார். இருப்பினும், வேட்பாளர் தேர்வு போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் நேரத்தில் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைத்தாலும், மிகக் குறைந்த நிதி, வளங்களோடு பெண்கள் களமிறக்கப்படுவதாகவும் அவர் கூறினார். “இது நீதியல்ல. இது ஒரு திட்டமுமல்ல. இது கட்சியின் சொந்த பலத்தை சரியாக கையாளத் தெரியாத நிர்வாகத் தோல்வி” என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



