சிலாங்கூரில் 55 இந்திய சமூகத் தலைவர்கள் நியமனம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 13,

சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களுக்கான நலப்பிரிவில் 55 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Papparaidu தெரிவித்தார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் இந்திய சமூகத்திற்குமான பாலமாக இந்த 55 இந்திய சமூகத் தலைவர்கள் செயல்படுவார்கள் அவர் வலியுறுத்தினார். சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வை உறுதிச் செய்யவும் சிலாங்கூர் மாநில அரசின் நலத்திட்டங்களை இந்திய சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கும் பணிகளை முதன்மையாகக் கொண்டு இந்த 55 பேரும் செயல்படுவார்கள் என தாம் நம்புவதாக Papparaidu நம்பிக்கை தெரிவித்தார். 

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 55 இந்திய சமூகத் தலைவர்களும் அந்தந்த பகுதிகளில் வாழும் இந்தியர்களுடன் அணுக்கமான உறவைக் கொண்டிருப்பதால் இந்தியர்களின் வாழ்வியல் சிக்கலை முறையாகக் கையாண்டு தீர்வை வழங்குவார்கள் என Papparaidu தெரிவித்தார். 2026 முதல் 2027 வரை என ஓராண்டுக்கு அவர்களுக்கான இந்த பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ச்சியான அவர்களுடைய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களின் நல்வாழ்வை உறுதிச் செய்யும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Papparaidu தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *