ஏற்றுமதி இறக்குமதி நிறுவன போர்வையில் விபச்சாரம்
- Tamil Malar (Reporter)
- 02 Dec, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கிள்ளான், டிச. 2-
சொத்து மேலாண்மை, இறக்குமதி-ஏற்றுமதி நிறுவனம் என்ற போர்வையில் இயங்கிய ஒரு கும்பல், வெளிநாட்டுப் பெண்களை வைத்து ஒரு முறை 50 ரிங்கிட் முதல் 80 ரிங்கிட் வரை வசூலித்து விபச்சாரத் தொழில் நடத்தியது அம்பலமாகியுள்ளது.
கிள்ளான் சென்ட்ரல் பகுதியில் உள்ள மூன்று மாடி கடை வீட்டை “கெவின்” எனப்படும் நபரும், “கேப்டன்” என்ற பங்களாதேஷ் நாட்டவரும் இணைந்து இந்நடவடிக்கையை நடத்தி வந்தனர்.
நேற்று இரவு 10.25 மணிக்கு இமிக்ரேஷன் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 17 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இமிக்ரேஷன் துறைத் தலைவர் டத்தோ ஸகரியா ஷாபான் கூறுகையில், “பொதுமக்களின் புகாரையும், புத்ராஜெயா இமிக்ரேஷன் தலைமையக புலனாய்வுப் பிரிவின் இரு வார ரகசிய கண்காணிப்பையும் தொடர்ந்து 14 அதிகாரிகள் சோதனை நடத்தினர்” என்றார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், “கெவின்”, “கேப்டன்” உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இமிக்ரேஷன் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



