தாபோங் ஹாஜி நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்ததை அம்னோ ஒப்புக்கொள்ள வேண்டும் – கைரி ஜமாலுடின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 5-

2014 முதல் 2017 வரை பாரிசான் நேஷனல் (BN) ஆட்சிக் காலத்தில் தாபோங் ஹாஜி (TH) நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்ததை அம்னோ கட்சி வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

தாபோங் ஹாஜி தொடர்பாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையைத் தொடர்ந்து, குறிப்பாக நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, தாபோங் ஹாஜி நிர்வாகத்தில் முறைகேடு அல்லது ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று அம்னோ தலைவர்கள் சிலர் மறுத்து பேசியதை தாம் புரிந்துகொள்வதாக அவர் கூறினார்.

எனினும், தன்னை சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் கட்சியாக அம்னோ காட்டிக்கொள்ள விரும்பினால், வெறும் மறுப்புகள் மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"தேர்தல் பிரசாரத்தின் போது எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் முறைகேடு எதுவும் இல்லை, அதிக ஹிபா வழங்கினோம், முஅஸ்ஸஸா ஹஜ் மானியத்தையும் தொடர்ந்தோம் என்று கூற வேண்டிய சூழல் இருக்கலாம்," என்று கைரி தெரிவித்தார்.

அதேவேளையில், கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாக பலவீனங்களை ஒப்புக்கொண்டு, அவை மீண்டும் நிகழாத வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே கட்சியின் நம்பகத்தன்மையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *