தலைநகரில் தாகூர் விழா!
- Shan Siva
- 06 Aug, 2026
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: இந்தியக் கவிஞர், இலக்கிய மேதை ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளையும் சிந்தனைகளையும் இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘Ekla Cholo Re’ என்ற சிறப்பு கலை நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சனிக்கிழமை பிரிக்பீல்ட்ஸ், Netaji Subhas Chandra Bose இந்திய கலாச்சார மையத்தில் பிற்பகல் 3 மணி தொடங்கி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பாடகியும் ஒலி-ஒளிக் கலைஞருமான Astrae மற்றும் இசைக் கலைஞர் Kieya இணைந்து, தாகூரின் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் சிந்தனைகளை இசை, காட்சிக்கலை மற்றும் கதை சொல்லல் (Immersive Storytelling) மூலம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக வழங்க உள்ளனர்.
மேலும், பாரம்பரியம், தொழில்நுட்பம் மற்றும் இசை ஆகியவற்றை ஒருங்கிணைத்து கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இசை மட்டுமன்றி, நடனம், இலக்கியம், உணவு மற்றும் கலந்துரையாடல் ஆகிய அம்சங்களும் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை; பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.'
இந்த நிகழ்ச்சியை Netaji Subhas Chandra Bose Indian Cultural Centre, Mokshya Academy of Performing Arts, Ekla Cholo Re மற்றும் Beats & Bry ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
பதிவு செய்துவிட்டு பங்கேற்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



