கிள்ளானில் துப்பாக்கிச் சூடு! ஆடவர் பலி! காவல்துறை விசாரணை!
- Thinagaren Sanggaren
- 30 Nov, 2025
நவம்பர் 30,
கிள்ளானில் வாகனத்தில் அமர்ந்திருந்த ஆடவர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதன் பின்னணியில் காவல்துறையின் நடவடிக்கைகள் ஏதுமில்லை என சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் DATO’ SHAZELI KAHAR இன்று விளக்கமளித்தார். முன்னதாகக் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபரைத் துப்பாக்கியால் சுட்டதாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தி என தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் தெரிவித்திருந்ததை அடுத்து கிள்ளானில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் DATO’ SHAZELI KAHAR தெரிவித்தார்.
நேற்றிரவு 8.35 மணிக்கு கிள்ளானில் உள்ள Taman Mesra Indah குடியிருப்புச் சாலையில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் தென்கிள்ளான் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் DATO’ SHAZELI KAHAR தெரிவித்தார். தனிநபர் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் மேலும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் DATO’ SHAZELI KAHAR தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



