கிள்ளான் கால்வாயில் AIR SELANGOR பணியாளரின் சடலம் மீட்பு!
- THINAGAREN SANGGAREN
- 13 May, 2026
மே 13,
கிள்ளான் தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு கால்வாயிலிருந்து ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. நேற்று நண்பகல் 1.30 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்குக் காவல் அதிகாரிகள் விரைந்து சடலத்தை மீட்டதாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Lim Jit Huey தெரிவித்தார். நண்பகல் 2.05 மணிக்கு மீட்கப்பட்ட உடல் பிரேதப்பரிசோதனைக்காகக் கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாக காவல் ஆணையர் Lim Jit Huey தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 50 வயது உள்ளூர் ஆடவர் என்றும், சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்தின் பகுதி நேர ஊழியர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் எந்தவொரு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொலிகளையும் புகைப்படங்களையும் சமூகவலைத்தலங்களில் பகிர்வதைத் தவிர்க்கும்படி காவல் துறை பொதுமக்களைக் கேட்டுகொண்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



