கைரி ஜமாலுடின் அம்னோவுக்குத் திரும்ப விரும்புவதை அக்மல் சலே வரவேற்றுள்ளார்!
- Muthu Kumar
- 09 Dec, 2024
அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மல் சலே, தனது முன்னாள் கட்சி சகாவான கைரி ஜமாலுடின் மீண்டும் அம்னோவுக்குத் திரும்ப விரும்புவதை வரவேற்றுள்ளார்.மேலும் கட்சியில் முன்னாள் அமைச்சரான கைரிக்கும், அவரது கொள்கைகளுக்கும் இடம் இருப்பதாக தாம் நம்புவதாக அக்மால் கூறினார்.
குறிப்பாக டிஏபிக்கு எதிராக, வெளிப்படையாகப் பேசியதற்காக சர்ச்சையில் சிக்கிய அக்மால், அம்னோவில் ஆமாம் போடும் நபர் மட்டுமே உருவாக்கப்படவில்லை என்பதற்கு சான்றாகும் என்று குறிப்பிட்டார். மாறுபட்ட கருத்துகளை அம்னோ வரவேற்கிறது என்றார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கட்சித் தலைவர்கள் தெரிவிக்கும் எந்தவொரு முன்மொழிவையும் அல்லது கருத்தையும் எப்போதும் வரவேற்பார் என்றும் அவர் கூறினார்.
அம்னோவில் இருப்பதன் மூலம் ஒருவர் ஆமாம் போடும் மனிதர் என்று அர்த்தமில்லை என்பதற்கு தாம்தான் ஆதாரம். கட்சித் தலைவரின் கருத்துக்கு முரணான சில கருத்துக்களை கொண்டிருந்தாலும், தனது கருத்துக்களை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு அவர் ஒரு போதும் தன்னிடம் கேட்டதில்லை, ”என்று அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



